மழை நீர் சேமிப்பு

முன்னுரை :
தெய்வப் புலவர் “நீரின்றி அமையாது உலகு” என்றார் சிலப்பதிகாரம் தந்த இளங்கோவடிகள். “மாமழை போன்றதும், மாமழை போற்றுதும்” என்றார். இவ்வாறு நீரின் இன்றியமையாமையையும் நீர் தருகின்ற மழையின் சிறப்பினையும் தமிழ்ப்புலவர்கள் காலந்தோறும் போற்றி வந்துள்ளனர்.
அனைவருக்கும் அடிப்படைத் தேவை தண்ணீர் என்று சொல்லுவது மிகையில்லாத உண்மை. மேலும், ஒரு நாட்டினுடைய வலிமையையும், பெருமையையும் கூட நீர் வளத்தால் கணிக்கப்படுகிறது. இதற்கு மாற்று என்பது இல்லாத காரணத்தால், தண்ணீரை நாம் ஒரு தாய்க்கு ஒப்பாகக் கூறலாம் ஓரிடத்தில் மக்கள் வாழத் தொடங்குவதும், வாழ்வைத் தொடருவதும் அங்குள்ள நீர் வசதியைக் கொண்டுதான் என்று சொன்னால் அது மிகையாகாது.
தண்ணீருக்கு ஆதாரம் :
குடிநீர் இல்லையயன்றால் குடியிருப்பும் இல்லை. நீரில்லாத போதுதான் இன்னலும், இடம் பெயருதலும் நிகழ்கின்றன. தவிக்கிற மக்களுக்கு மிகவும் தேவைப்படுவது தண்ணீரே. ‘தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை’ என்பது போலத் தண்ணீரிலும் சிறந்ததொரு உயிர்க் காப்பும் இல்லை எனலாம்.

மழை நீர் சேகரிப்பு :
மழை நீர் வீணாகிவிடாமல் நிலத்திற்குள் அதனைச் செலுத்தி சேமிப்பதை மழை நீர் சேகரிப்பு என்கின்றன நிலத்தடி நீர் குறைவதைத் தடுக்கவும், நீர் வளத்தைப் பெருக்கவும், நீரின் தரத்தை உயர்த்தவும், கடலோரப் பகுதிகளில் கடல் நீர் நிலப்பகுதியின் கரையைத் தாண்டி உட்புகுவதைத் தடுக்கவும் நிலத்தடி நீரைச் சேமிக்கிறோம். பக்குவமாக சேமித்து, சிக்கனமாகச் செலவு செய்வது அறிவார்ந்த செயலாகும்.

சேமிக்கும் முறை :
பயிரிடும் முறைகளை மாற்ற வேண்டும். பாசன வழிமுறைகளை மாற்றியும் நீரைப் பயன்படுத்துகின்ற முறையினையும் மாற்றிப் பெயர் அளவில் நீரைச் சேமிக்கலாம். ஏரி, குளங்களைப் பரவலாகப் பெய்கின்ற மழைநீர் முழுவதும் நீர் நிலைகளை வந்தடைய ஆவண செய்ய வேண்டும். வீடுகளில் மழைநீரைச் சேமிப்பதற்குச் சேமிப்புத் தொட்டிகளை அமைத்து வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளை மெழுதிய தளமாக மாற்றாமல், மணற்பாங்காகவோ, இயல்பான நிலப்பரப்பாகவோ விட்டு விடுதல் வேண்டும். மாடியில் விழுகின்ற மழை நீரைக் குழாய்கள் மூலம் தரைப் பகுதிக்குக் கொண்டு வந்து, கிணற்றுக்கும் வீட்டுச் சுவருக்கும் இடையிலுள்ள நிலப் பகுதியில் ஒரு தொட்டி அமைத்துச் சேமிக்க வேண்டும் கிணறுகள் இல்லா வீடுகளில், சிறுகால்வாய் மூலம் வடிகட்டும் தொட்டிக்குள் மழைநீரைப் பாய்ச்சி, அங்கிருந்து கசிவுநீர்க் குழாய் வாயிலாகக் குழாய்க் கிணற்றுக்குள் செலுத்திச் சேமிக்கலாம். பயன்கள் :
பெய்த மழைநீரைத் தகுதியான வழிகளில் தேக்கி வைத்துப் பாதுகாப்பதால் நீர்வளத்தைப் பெருக்கலாம் இயற்கை வளங்களைப் பெருக்கி, சுற்றுச் சூழல் பாதுகாப்பையும், மாசுக் கட்டுப்பாட்டையும் பெறலாம். வளிமண்டல ஓசோன் பாதிக்காதவாறு காக்கலாம். அடை மழையினால் புறநகர்ப் பகுதிகளிலும் கிராமப் புறப் பகுதிகளிலும் மழைநீர் வெள்ளமாய்ப் பெருகி வீணாவதைத் தடுக்கலாம். “இன்றைய சேமிப்பு நாளையத் தேவை” என்பதற்கேற்ப, பருவமழையானது பெய்யாது பொய்க்கும் போது ஏற்படுகின்ற தண்ணீர்த் தட்டுப்பாட்டையும், தலைவிரித்தாடுகின்ற பஞ்சத்தையும் மழைநீர் சேகரிப்பால் ஈடுகட்ட இயலும்.

முடிவுரை :
நம் பாரத நாடும் பழம் பெரும் நாடு. இந்நாட்டில் இமயம் முதல் குமரி வரை வற்றா வளம் சுரக்கும் பேராறுகள் அன்று தொட்டு இன்று வரை ஓடிக் கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் காரணமாக அமைவது மழையே. ‘உயிரின் உறைவிடம் உடல்; மழைநீரின் உறைவிடம் நிலம்’ எனவே நிலத்தடி நீரைப் பாதுகாத்துச் சேமித்து வைப்பதன் வாயிலாக நீண்ட காலத்திற்குத் தண்ணீர்ப் பற்றாக் குறையைச் சமாளிக்கலாம் என்பது வெள்ளிடைமலை. “விண்ணின் மழைத்துளி; மண்ணின் உயிர்த்துளி” என்பதை உணர்ந்து, ஒவ்வொருவரும் அரசுடன் சேர்ந்து மழைநீர் சேமிப்பில் ஈடுபட்டால் நாடு நலம் பெறும் நல்ல வளம் பெறும்.
– லியோ அடைக்கலராஜ், JKM 1010

நல்ல மனம் – சிறுகதை

                “டாக்டர்! அவசரமா நீங்க என்னோட வரனும். அதிகமா காய்ச்சல் இருப்பதால் நோயாளியை இங்கே கூட்டிட்டு வர முடியலே!

                வந்தவர் பரபரப்பாக சொல்ல டாக்டர் அவரை வியப்பாக பார்த்தார். இப்போ. என் கிளினிக்குக்கு வந்தவங்களைப் பார்த்து கொண்டிருக்கேன். நான் உடனே நீங்க கூப்பிடுகிற இடத்திற்கு வரணும்னா எனக்கு பீஸ் மற்றும் நான் காரில் வருவதற்கான செலவு என முன்னூறு ரூபா தரனுமே?” என்றார்.
                “ஓ.கே. சார்! நீங்க கேட்கிற பீஸை தர்றேன். தயவு செய்து உடனே எங்ககூட புறப்படுங்க டாக்டர்!வந்தவர் அவசரப்படுத்தினார். டாக்டர் எழுந்தார். நர்சிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தார். கிளினிக் முன் நின்ற காரில் ஏறினார். வந்தவரும் டாக்டர் அருகில் உட்கார்ந்தார். கார் புறப்பட்டது.
                “உங்க பேரு என்ன? நாம இப்போ எந்தத் தெருவுக்கு போகனும்?” டாக்டர் கேட்டார். என் பேரு ஜேம்ஸ் சார். நான் வழி சொல்றேன். அப்படியே போங்க! நேரே போய், இடது பக்க சாலையில் திரும்புங்க!ஜேம்ஸ் சொன்ன வழியில் காரை செலுத்தினார் டாக்டர். கோவில் வாசல் பகுதி வந்தது. அப்படி ஓரமா நிறுத்துங்க டாக்டர்!கோவில் வாசலை தாண்டி காரை ஓரமாக நிறுத்தினார் டாக்டர். என்னங்க! கோவில் வாசல் காரை நிறுத்தச் சொல்றீங்க? பே­ண்ட் இங்கேயா இருக்கார்?” காரை விட்டு வெளியே வந்தபடி கேட்டார் டாக்டர்.
                “அதோ அவர்தான்… அவருக்கு தான் காய்ச்சல். அவருக்கு பார்க்கத்தான் உங்களை கூப்பிட்டு வந்தேன். ஜேம்ஸ் சுட்டிக் காட்டிய திசையை பார்த்தார், டாக்டர். அங்கே ஒரு பிச்சைக்காரர் காய்ச்சலில் சிக்கி கை, கால் முடக்கி படுத்துக் கிடந்தார். அந்த பிச்சைக்காரரையும், தன்னை கூட்டி வந்த ஜேம்ஸையும் மாறி மாறி பார்த்தார் டாக்டர். ஜேம்ஸ்க்கு ஒரே உதறல். பிச்சைக்காரர் என்பதால் சிகிச்சை அளிக்க டாக்டர் மறுத்து விடுவாரோ என்று மிரண்டார்.
                “டாக்டர்! நான் கோவிலுக்கு வந்த இடத்தில்தான் இந்த பிச்சைக்காரரை பார்த்தேன். முக்கல் முனகலுடன் கவனிப்பாரற்று காய்ச்சலால் கஷ்டப்படுவதை பார்த்தேன். அதனால்தான் உடனே உங்களை இங்கே கூட்டி வந்தேன்!கெஞ்சலாக சொன்னார் ஜேம்ஸ். உடனே டாக்டர் நேராக அந்த பிச்சைக்காரர் பக்கம் போய் கிசிச்சையை ஆரம்பித்தார்.
                ஒரு ஊசியை போட்டு, சில மாத்திரைகளையும் அந்த பிச்சைக்காரரிடம் கொடுத்து சாப்பிட வேண்டிய முறையை சொன்னார்.
                பின்பு ஜேம்ஸ் பக்கம் போய் அப்போ நான் புறப்படுகிறேன்!என்றார். ஜேம்ஸ் தன் பையில் இருந்து முந்நூறு ரூபாயை எடுத்து டாக்டரிடம் நீட்டினார். அதை வாங்க மறுத்த டாக்டர் வேண்டாம்! எனக்கு பீஸ் எதுவும் வேண்டாம். இந்த பிச்சைக்காரர் உங்களுக்கு ஒட்டோ உறவோ இல்லை. ஒரு மனிதாபிமானத்தில் என்னை அழைத்து சிகிச்சை பார்க்க வச்சீங்க! எனக்கும் மனிதாபிமானம் இருக்கு! நான் புறப்படுகிறேன்என்று சொல்லிவிட்டு காரில் ஏறிச் சென்றார் டாக்டர்.
                ‘இந்த உலகத்தில் மனிதாபிமானத்திற்கு இன்னும் குறைவில்லை. இரக்கமும் சேவை மனப்பான்மையும் இருக்கவே செய்கிறது. ஜேம்ஸ் மனதில் புதுத் தெளிவும், நம்பிக்கையும் பிறந்தது.
– D.ஸ்டெபி, PMB 1084.

கூட்டமைப்பாய் சேர்வோம்!

பாதிப்பே வழிகாட்டல்

                பாதிப்புகளை உணர்தல்… உயர்தலால் நாம் அடைந்த பயன் ஆகியனவற்றை கண்டோம் சென்ற இதழிலே… இது மட்டுமல்ல தோழர்களே! தோழிகளே!! பாதிக்கும் முன் இருந்த நம் நிலைçயினை கூட நாம் காண வேண்டும்.
                பாதிக்கப்பட்டவர்களால் உதிர்க்கும் ஒரு சொல் கூட மகத்துவம்வாய்ந்தது. பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வு நெறிமுறைகள் கூட நம் புது வாழ்விற்கான வழிகாட்டுதலாக அமையும். பாதிக்கப்பட்டவர்களின் பேச்சுக்குள் பலவற்றை நாம் கேட்டிருப்போம். ஏனோ தானோ மனநிலையில் உளறிக் கொண்டு எப்படி வாழக் கூடாதோ அப்படித் தான் வாழ்ந்து கொண்டிருப்பர்.
                நமது வழிகாட்டிகளும், முன்னோர்களும் சமூகத்தில் சுமூக உறவுஇருக்க வேண்டும் என்றும்; வளர வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இருந்தும்… நாம் உறவாக கூட மறுத்தால் ஏதோ நமக்குள் ஏற்றத் தாழ்வுகள்உண்டு என்று தான் அர்த்தம் கொள்ள முடியும். ஏனென்றால் நாம்… நமக்குள்… ஆண்டாண்டு காலமாய் வளர்த்த நல் உறவு கூட காணாமல் போய் விட்டதே…! நாம் கூடாவிட்டால்… நாம் வாழ கூட வைப்பவர் யார்? தான் தோழர்களே! தோழிகளே! … உணருங்கள்…! உங்களால் முடியும்! உணர்த்துங்களேன்…! இனியும் உண்ண மறுக்காதீர் கூட்டமைப்பை…
தடையும் சாதிக்கும் வெறியும்
தோழர்களே! … தோழிகளே!
                ஒன்று சேர தடைகள் உண்டு. அதனை தகர்த்தெறிய திறன்களையும் நாம் அறிவோம். தடைகள் வந்தால்தான் சாதிக்கும் வெறி நம்மிடம் பிறக்கும். தென்னாப்பிரிக்க சம்பவம் காந்திக்கு ஒரு தடை… அவமானப் பேச்சுக்களும், தரித்திர வாழ்க்கையும் உலகிற்கு ஒளியை தந்த தாமஸ் ஆல்வா எடிசனுக்கு ஒரு தடை … குருகுலக் கல்வி முறை டாக்டர் அம்பேத்காருக்கு ஒரு தடை… இதுபோன்ற தடைகள்தான் அவர்களையும் சாதிக்கத் தூண்டியது. இதே போன்றுதான் நமக்கு ஏற்படுகின்ற தடைகளையும் நாம் தாண்டிவிட்டால் தன்னம்பிக்கை நமக்குள் பிறக்கும். ஓர் ஓட்டப் பந்தய வீரன் தடை தாண்டும் போட்டியில் வெற்றி என்ற இலக்கை அடைந்துவிட்டால்… மகிழ்ச்சிக்கு அளவில்லை… அதைவிட அவன் அடையப் போகும் பயன்களுக்கும் அளவில்லை. இதை போன்றுதான் தோழர்களே! தோழிகளே! … நாம் தடைகளை கடந்து கூட்டமைப்பாய் சேர்ந்து விட்டால்… நாம்; நமது சமுதாயம்; நமது எதிர்கால சந்ததியினர் அடையப் போகும் பயன்களுக்கும் அளவில்லை.
ஜனசக்தி
ஆம் தோழர்களே! தோழிகளே!
                தனி ஆளாய் நாம் இருந்தால் எதனையும் வெற்றிக் கொள்வது கடினம். கூடினால் நம்மில் ஜனசக்திஎன்ற மக்கள் சக்தி உருவாகும். நமது சமுதாயத்தின் பெரும் பலமே மக்கள் சக்திதான். அந்த மக்கள் சக்தியினால் நாம் அடைந்தது தானே நமது இந்திய திருநாட்டின் சுதந்திரம். இன்று கூட… அந்த சுதந்திர நாளில் சுதந்திரமாக செல்ல இயலவில்லை. எந்த இரயில் தண்டவாளத்தில்… எந்த இரயிலில் … எந்த இடத்தில் குண்டு வெடிக்குமோ என்ற வெட்கக் கேடான சூழ்நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எண்ணிப் பாருங்கள் தோழர்களே! தோழிகளே! மக்கள் சக்தியினால் வாங்கப்பட்ட சுதந்திரம் மக்கள் சக்தியினால் காக்கப்பட வேண்டிய சூழலே உள்ளது. அந்த மக்கள் சக்தியினை உருவாக்க நாம் தடுமாறுவது ஏன்? இதனால் இவற்றினை காக்க மக்கள் சக்தி தேவை. உரிமைகளை பெறவும்; காக்கவும்; கடமைகளை செய்யவும் கேட்கவும்; நமக்குள் மக்கள் சக்தி தேவை. அந்த மக்கள் சக்தி கூட்டமைப்பு உருவாகும்போதுதான் கிடைக்கும்.
தலைமைத்துவம்
                இதுபோன்ற மக்கள் சக்தியினை ஒருங்கிணைத்து வழிநடத்த நல்ல தலைமைநமக்கு தேவை. தலைமை இல்லையயன்றால் செல்லும் பாதை மாறும்… தடம் மாறும். தடுமாற்றம் உருவாகும். பலர் தடம் மாறி; தலைமை மாறி பயணித்த வரலாறும் நாம் அறிவோம்… பல அமைப்புகள் காணாமல் போய்விட்டதையும் நாம் அறிவோம். இன்னும் ஏன்? நம் குழுக்களில் கூட நல்ல தலைமை; வழிகாட்டுதல் இல்லாததால் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போய்விட்டதையும் நாம் அறிவோம். நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை எண்ணிப் பாருங்கள் தோழர்களே! தோழிகளே! எனவே நாம் கூட்டுணர்வு அடிப்படையில் செயல்படும்போதும் நல்ல தலைமைத்துவ பண்புகள் நம்மில் வளரும்… தலைமைத்துவம் வளரும்போது எந்த செயலை செய்யும்போதும் அல்லது ஈடுபடும்போதும் பொறுப்பு ஏற்கும்தன்மை வளரும். இதன் மூலம் நமது செயல் வெற்றி பெறும்போது நமக்கான ஒரு அங்கீகாரம்நாம் பெறுவோம். அந்த அங்கீகாரமே நமது வாழ்வின் வளமாக… நமது வளர்ச்சிக்கான அஸ்திவாரமாக அமையும்.
                நான்கு பேர் மதித்த நம்மை … நாற்பது குழு மக்களும் மதிப்பர்… நான்கு கிராமத் தலைவர்களும் மதிப்பர்… நமக்குள்… நம் மனதில் ஏற்பட்ட தெளிவை கண்டு அசாத்தியமான துணிச்சல் பிறக்கும்… இதன் விளைவாய் நமது பேச்சில்கூட தெளிவு பிறக்கும். நாம் யாரிடமும் பேச கூச்சப்பட மாட்டோம். தவறுகளுக்காகவும், உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க அஞ்சமாட்டோம். எண்ணிப் பாருங்கள் தோழர்களே! தோழிகளே! 1999-க்கு முன்பு நாம் எத்துனை பேரிடம் பேசியிருப்போம். இன்றோ… 20 பேர் 30 பேர் கூடியிருக்கின்ற அவையிலே கூட பேசத் துணிந்து விட்டோம். இது நல்ல மாற்றம் தானே…? இதுபோன்ற மாற்றம் தொடர வேண்டும். இது நமக்குள் நல்ல தலைமைப் பண்பு வளர்ந்து விட்டதை தானே காட்டுகிறது. எனவேதான் கூறுகின்றோம் இன்று நாற்பது பேருக்கு தலைவனாய் தலைவியாய் இருக்கின்ற நாம் நாளை ஆயிரமாயிரம் பேருக்கும் தலைவனாய்; தலைவியாய் பரிணாமம் எடுக்க முடியும். எத்தனை நாள்தான் பிறர் தலைமையின் கீழ் செயல்படப் போகிறோம். நாம் தலைவர்களாய் மாறி வழிகாட்ட தயாராக கூடாதா? வழிகாட்டியாய் இன்று நமக்கு இருப்பவர்கள் நாளையே நம்மை கைவிட்டுவிட்டால் நாம் என்ன செய்யப் போகின்றோம்? எண்ணிப் பாருங்கள். புதிய கலாச்சாரம் படைப்போம்!
                “பிரச்சனைக்கு தீர்வு போராட்டம் தான்” – இது பொது நல அமைப்புகளின் சித்தாந்தமாக உள்ளது. நான்கு பேர் கூடி நாம் சாதிக்கும்போது நமக்குள் ஒரு ஆவல்… அல்லது மேலும் பல செயல்களுக்காக போராட வேண்டும் என்ற உணர்வு மேலோங்கும். இதுபோன்ற போராட்ட உணர்வு உம்மில் கூட்டமைப்பாய் உருவாகி விட்டால் எளிதில் கிடைக்கும். சமதர்ம உணர்வும் உம்மிடம் மேலோங்கும்.
                ஆண், பெண் பாகுபாடும் அறவே நீங்கும். ஜாதி, மத பாகுபாடும், ஏழை பணக்காரன் வித்தியாசமும் எளிதில் மறையும். ஏழைகளாய் நாம் பிறந்து விட்டதால் எகத்தாளம் ஆகும். அதிகார கூட்டத்திற்கு ஆணியடிக்கும் அதிகார கூட்டமாக நாமும் மாறலாம். நமக்கு வேண்டியதை நாமே முடிவு செய்யும் தீர்மான சக்தியாக நாம் உருவெடுக்க முடியும். சாஸ்திர சம்பிரதாயங்கள் அடக்கப்பட்டு நமக்கென்று உள்ள புதிய கலாச்சார பண்பாடுகளை வளர்த்தெடுக்க முடியும்.
உண்மை கூட்டமைப்பு
ஆம் தோழர்களே! தோழிகளே!
                நாம் மட்டும் கூட்டமைப்பாய்பலமாய் மாறிவிட்டால் மக்கள் சக்தியினை திரட்டி நல்ல தலைவர்களாய் நாம் உருவாகி, நமது பிரச்சினை மற்றும் தேவைகளுக்காக போராடி நம் வாழ்வில் வளம் காண முடியும். இன்றைய சமூக அமைப்பை உணருங்கள். அதில் நம் நிலையினை காணுங்கள். அந்த சமூக அமைப்புக்கு மாற்றாய் நமது கூட்டமைப்பை மாற்றுங்கள். மாறும் நம் நிலை… மாறட்டும்…அடிமையாய்; அதிகார கைப்பிடிக்குள் வாழத்தான் நம் உத்தேசமா? இதைவிடுத்து உரிமைக்கு குரல் கொடுக்க… உண்மையினை நாம் வெளிப்படுத்த நம் திறமைஎன்னும் கூட்டமைப்பானஆயுதத்தை கையிலெடுங்கள். நம்மோடு நமக்காய்; நலிந்தவர்க்காய் குரல் கொடுக்க நல்ல இதயங்கள் தயாராக உள்ளது. உண்மையாய் வாழ நாம் முற்படுவோம். அந்த உண்மைகூட நம் கூட்டமைப்பாய் இருக்கட்டும் சரி தோழர்களே! தோழிகளே!!
                பயனைப் பார்த்தோம்… மற்றவையும் உண்டு… மற்றதை பார்க்க மற்றுமொரு இதழை புரட்டுங்கள்…
(தொடரும்…
                எஸ்.அசோக்குமார்
                ஒருங்கிணைப்பாளர், ஜெயங்கொண்டம்.

பொங்கல்

மூடுபனி விலக்கி  மொய்த்த குளிர்விலக்கி
நாடு நினைத்ததெலாம் நன்கு தொழிற்படுத்தி
தோடவிழ்த்துச் செம்பரிதி பொன்வெயில் தூவுகின்றான்
வீடுமலி பொங்கல் விழாப்பாடி வாழ்த்துவோமே!           – பாரதிதாசன்.

போகிப் பொங்கல் :-  பழையன கழிதலும், புதியன புகுதலும்
அன்று : வீடு மற்றும் வீதியையும் சுத்தம் செய்து களஞ்சியத்தில் புதிய நெல்லைச் சேர்க்க பழைய நெல்லை எடுத்துவிட்டு சுத்தம் செய்வர். மார்கழியோடு துயரங்களும் கழியும் என்று தை மகளை வரவேற்க தயார் செய்வர். இன்று : வீட்டுக் கழிவுகளோடு பிளாஸ்டிக் மற்றும் டயர்களை முயன்று சேகரித்து நண்பர்களையயல்லாம் ஒன்றுகூடி கொளுத்தி மகிழ்வது. விளைவு : சுற்றுச்சூழல் சீர்கேடு, சுவாச நோய்கள்.

தைப் பொங்கல் :-
உழவே தலை என்றுணர்ந்த பண்டைத் தமிழர் தைத் திங்கள் முதல் நாளை உழவர் தினமாகக் கொண்டாடினர். விளைச்சலைத் தந்த பூமித்தாயையும், ஆதாரமாக விளங்கிய நீரையும், வானின்று வளம் பெருக்கிய கதிரவனையும் நன்றியோடு வணங்கி மகிழும் நாள் பொங்கல் திருநாள்.

அன்று :
உலகு நலன்காண உழவன் விதைத்து
கதிரடித்து செந்நெல் களம் சேர்த்து
ஊர்கூடி ஓரிடத்தில்  உரல் சேர்த்து
உலக்கைப் பாடலோடு உயர்நெல்லைத் தீட்டி
கோலமிட்ட வாசலில் புதுப்பானை வைத்து
பாலோடு புத்தரிசி ஏலம் வெல்லம்
நெய்யிட்டு பொங்கல் சமைத்து
பொங்கலோ பொங்கல் என குலவையிட்டு ஆர்ப்பரித்து
மஞ்சள், இஞ்சி, கரும்புடன் அமிழ்தன்னை பொங்கல் வைத்து
என்றும் இளமை மாறா இளம்பரியைப் போற்றி வணங்கினர்
உறவோடு விருந்துண்டு உளமகிழும்
உவகைத் திருநாள் தைத்திருநாள்.

இன்று :
வாசற் பொங்கலெல்லாம்
வரலாற்றுப் பாடமாச்சி
முற்றத்துப் பொங்கலுக்கும்
முற்றுப்புள்ளி வச்சாச்சி – எங்கள் நகரிலே குக்கரிலே பொங்கலாச்சி
குலவை சத்தம் மாறிப்போச்சி
விசில் சத்தம் வந்தாச்சி
வீடெங்கும் (பொங்கல்) மணமாச்சி
வீட்டிலுள்ள நாம் மட்டும்
விருந்துண்ணும் நிலையாச்சி.

மாட்டுப் பொங்கல் :-
கழனி அமைப்பது முதல் களம் நிறைப்பது வரை உறுதுணையாய் விளங்கிவரும் மாடுகளுக்கெல்லாம் மாச்சிறப்பு செய்யும் நாள் மாட்டுப் பொங்கல்.
மங்கா மகிழ்ச்சியோடு மாடு கன்று கழுவி
கொம்பு சீவி, வண்ணம் தீட்டி
மாலையிட்டு பொங்கல் ஊட்டி
வீதிவரை விரட்டி ஓட்டி
மாக்களோடு மக்களுமாய்
மகிழ்ந்து கொண்டாடி
செய்நன்றி மறவாத தமிழர்தம் பண்பை
தெரிவிக்கும் திருநாள் மாட்டுப் பொங்கல்.

கன்னிப் பொங்கல் :-
அறம் பொருள் இன்பத்தோடு வீரத்தின்
விளைநிலமும் தமிழர்தம் திருநிலமே
என்றுணர்ந்த நாள் இந்நாள்
(மறவர்) திறம் வளர்த்திடும் திருநாள்
இதை  கணூப் பொங்கல், காணும் பொங்கல் என்றும் தற்போது அழைக்கின்றனர். திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

பகை கொண்ட உள்ளம்
துயரத்தின் இல்லம்
பகையோடு புகையையும் நீக்கி
புதிய போகி படைத்திடுவோம்
இடையில் வந்த முறையை மாற்றி
இயற்கையோடு வாழ்ந்திடுவோம்
இனிய பொங்கல் படைத்திடுவோம்
இன்பத் திருநாள் வாழ்த்துக்கள்.
– ஜெ.ஜெகந்நாதன்

புத்தாண்டை நோக்கி…

பல நூறு ஆண்டுகள் பிறந்தாலும்
ஒவ்வொரு ஆண்டும் நமக்கு புத்தாண்டுதான்
ஆனால் நமக்குள்ளே
சாதியமும் மாறவில்லை
சமத்துவமும் பிறக்கவில்லை
அன்று
அரசர்கள் பதவிக்காக பல உயிர்களை கொன்றனர்
இன்று
அரசியல்வாதிகள் பதவிக்காக பல உயிர்களை கொல்கின்றனர்
மனிதனே! மாண்டது போதும்
மாறுவோம் இனியாவது மாறுவோம்
இப் புத்தாண்டு முதல்
இறைவனின் அருளோடும்
மனித மான்போடும் ஒற்றுமையாய் வாழ்வோம்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுடன்…
P.தேவா, KMSSS, (MT)

மண்ணுக்கு வந்த விண்ணகம் (கிறிஸ்துமஸ் செய்தி)

மனிதம் புனிதம் பெற்ற இம்மாபெரும் பெருநாளில் விண்வாழும் இறைவன் மண்ணை நோக்கி வந்திட்டார் என்ற கற்கண்டு செய்தி நம் உடம்புகளையயல்லாம் பூரிக்க வைக்கின்றது. நாளும் நாம் தேடும் இறைவன் இதோ நமது நடுவில்! காணட்டும் நமது கண்கள் இமைகள் மூடாமல்! சிறு “பட்டம்” பெற்றுவிட்டால் கால்கள் நடவாமல் மேல் நோக்கியே வாழும் நம் மனிதர்களில் மாற்றுச் சிந்தனையை “ஆன்மீகமாய்” நம் மனங்களில் நிலைநிறுத்த நம் பெருமான் இயேசு தன் நிலையில் இருந்து கீழிறங்கி ஏழையின் கோலம் பூண்டு அடிமையின் ஒரு உருவமாய் ஆளில்லா ஒரு மகனாய் நம்மில் ஒருவராகத் தம்மை இனம் கண்டு கொண்டார். ஆம் சகோதரமே கிறிஸ்துமஸ் விழா அன்பின் தன்மையை கரிசனையின் நற்கருத்தை உலகிற்குப் பறை சாற்றும் ஒரு அன்பு விழா. ஆண்டாண்டு காலமாய் ஆண்டவனை மலையிலும், வானத்திலும், மேகத்திலும், இயற்கை முழக்கத்திலும் இருப்பதாக எண்ணிய மக்கள் இன்று கண் கொள்ளாக் காட்சியாக மக்களுக்குச் சாட்சியாக மண்ணில் பிறந்திட்ட இயேசுவை முகமுகமாய் தரிசனை செய்யும் உண்மை நிலை ஒரு உன்னத நிலையே!

இயேசுவின் பிறப்பு நம்மையயல்லாம் ஆனந்த நிலைக்கு அழைத்துச் செல்லும் “அன்பின் திரு நிகழ்வு”. இந்நிகழ்வின் நிலையை சற்று நோக்குவோமானால் கருணை இயேசுவின் தாயுள்ள பாசம் நன்கு புலப்படும். ஆம் சகோதரமே ! இயேசுவின் பிறப்பு நேரம் நட்ட நடு இரவு சாமம். மக்களும் மாக்களும் அனைத்தும் கண்ணயரும் நேரம் நமக்கு சிறிதளவும் சங்கடங்கள் ஏற்படுத்தாமல் ஊரின் ஒதுக்குப்புறத்தில் உத்தம தேவன் மாட்டடையும் தீவணத் தொட்டிலில் பிறந்தார் என்றால் நம்மை எத்தகைய அளவிற்கு மரியாதை செய்து மாண்பை கொடுத்திருக்கின்றார் என்பதை திட்டவட்டமாக நன்கு புலப்படுகிறது.

இயேசுவின் பிறப்பு நிகழ்விலே நாம் கற்றுக்கொண்ட பாடமாக, பிறரை மதித்து ‘பிறர் வளர; தான் குறுக’ என்ற தாரக மந்திரத்தை ஏற்று வாழ முன்வருவோம். ஒவ்வொரு மனிதனும் மனுசியும் இறைசாயலே என்பதைப் புரிந்து கொண்டு இயேசுவின் பாணியிலே அன்பு வாழ்க்கை வாழ்ந்து நமக்குள் இருக்கும் இழிநிலையை வேரறுப்போம். அன்புக்கு புது வடிவம் கொடுப்போம். அவ்வாறு வாழ்ந்தால்தான் நம் வாழ்வு இனிமையாகும். இல்லையேல் நம் வாழ்வு முற்றிலும்  “தனிமை” வாழ்வாகி காய்ந்த மரமாக பயனற்றுப் போகும்.

மேலும், இன்றைய விழா நமக்கெல்லாம் விடுக்கும் செய்தி, சுற்றுச்சூழலை பாதுகாப்பதும் இயற்கையை நேசிப்பதும் ஆண்டவர் இயேசுவின் பிறப்பிலே அன்பு விருந்தாளிகளாய் இருந்தவர்கள் ஆடு, மாடு, கழுதைகள் மற்றும் அங்கிருந்த இயற்கைச் சூழல்கள், மலைகள், குன்றுகள் இவையாவும் இயேசுவின் பிறப்பிலே அழியாத இடத்தைப் பிடித்துள்ளன. இயேசுவின் மேல் நேசம், பாசம் கொண்ட நாம் நமது சுற்றுப்புறங்களைப் பாதுகாத்து இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம். ஆணும் பெண்ணும் இணைந்த மனித வாழ்வில் நமக்குள் இருக்கும் முரண்பாடுகள், வேறுபாடுகள் அத்தனையையும்களைய முற்படுவோம். ஏனென்றால் நம்முடைய வேறுப்பட்ட கலாச்சார சிந்தனைகளை ஏற்றுக்கொண்ட இறைமகன் இயேசு தம் பிறப்பினால் நம்மை தனது புனித நிலைக்கு உயர்த்தியுள்ளார். மனு உரு எடுத்தல் என்பது நம் அன்பு மக்களை பாவங்களில் இருந்து மீட்கின்றார் என்பதாகும். கடவுள் நம்மை அவர்தம் சொந்தப் பிள்ளையாக மாற்றுவதற்கு, தம் ஒரே மகனையே பெண்ணிடமிருந்து பிறக்கச்செய்கின்றார். கல்வாரிப்பலிக்கு முழுமையாய் கையளிக்கின்றார்.

கிறிஸ்துமஸ் விழா என்பது மனிதன் தான் இருக்கும் நிலையில் இருந்து உயர்த்தப்பட்டு அருளின் நிலையை அடைந்துள்ளான் என்பதாகும். இந்த உயரிய நிலையில் என்றும் வாழ்ந்திட நம்மை அழைக்கும் கிறிஸ்துமஸ் விழா  – மனிதர்களை புனிதர்களை நிலைக்கு உயர்த்திய உன்னத நாள்.

இந்நாளின் பொருளை உணர்ந்த நாம் நம் ஆயன் வழிநின்று தாயன்பை தந்து வாழ்வோம். பூமியில் புதல்வர், புதல்வியாய் புண்ணியம் சேர்ப்போம்! புறக்கணிக்கப்பட்ட பூபாலனாய் மண்ணில் உதித்த பாலன் இயேசுவின் புகழை நாளும் பாடுவோம். நல்ல வழியை பின்பற்றுவோம். கிறிஸ்துவின் ஆசீர் உங்கள் உள்ளங்கள் இல்லங்களில் தங்கி புத்தாண்டு புதுமையில் மனிதம் சிறக்க செயல்படுவோம்!

A.அற்புதராஜ்
மகளிர் திட்ட பணியாளர்

மக்களை அதிகாரப்படுத்துதல்

“மறந்து கொண்டே இருப்பது
மக்களின் இயல்பு. நினைவுப்படுத்தி
தூண்டிக் கொண்டே இருப்பது
எம் கடமை”

மக்களை அதிகாரப்படுத்துதல் என்பது இன்று நேற்று உதிர்க்கப்பட்ட சொற்றொடர் அன்று. நமது நாட்டின் சுதந்திர போராட்ட காலத்திலிருந்து உச்சரிக்கப்பட்டு வருகின்றது.
“சாதாரண அடித்தட்டு மக்களை மய்யப்படுத்தி அவர்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்காக செய்யப்படும் பணியே அதிகாரப்படுத்துதல் ஆகும்.
இதை அழகாக நமது நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.கே.ஆர்.நாராயணன் பின் வருமாறு கூறியுள்ளார்.
“அதிகாரமற்றவர்களுக்கும், தனிமைபடுத்தப்பட்டவர்களுக்கும், இந்நாட்டின் குடிமக்களாகத் தங்கள் பங்கை ஆற்றுவதற்குரிய வாய்ப்புகள் அளிக்கப்பட்டு அவர்களின் வாழ்வியல் தேவைகள் நிறைவேற்றப்படும் போதுதான் அதிகாரப்படுத்துதல் என்பது அதன் உண்மையான பொருளையும் முக்கியத்துவத்தையும் பெறுகிறது”
எனவே அதிகாரப்படுத்துதல் என்பது கீழ்க்கண்ட பொருளை உள்ளடக்கியது.

1. வாய்ப்புகளை உருவாக்குவது
2. திறமைகளை வளர்ப்பது
3. வாழ்வியல் தேவைகள்
இம்மூன்றின் மூலமாக “மக்களை அதிகாரப்படுத்துதல்” என்பது நடைபெறும்.
அதிகாரம் அற்றவர் யார் ? யார் அதிகாரப்படுத்த வேண்டும் ? என்ற கேள்விக்கு விடை காண ஆராயும் போது பலர் அதிகாரப்படுத்தப்படவேண்டிய சூழலில் உள்ளனர்.
1. பெண்கள்
2. தலீத் மக்கள்
3. விவசாய கூலித் தொழிலாளர்கள்
4. விவசாயிகள்
இவர்களை ஒட்டு மொத்தமாக கூற வேண்டுமானால் “வாழ்வின் விளிம்பில் பரிதவித்து நிற்கின்ற பாவப்பட்ட மக்கள்” எனக் கூறலாம். பாகுபாட்டினால்
பெண்களும், சமூக அந்தஸ்து இன்றி தலீத் மக்களும் உழைப்பிற்கு ஏற்ற பகிர்வு இன்றி கூலித் தொழிலாளர்களும், முதலீட்டிற்கு ஏற்றார் போன்று வருவாய் இன்றி விவசாயிகளும் பாதிக்கப்பட்டு அதிகாரமற்றவர்களாக இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களே இன்றைய சூழலில் தீர்மானம் செய்ய முடியாமல் முடிவெடுக்க முடியாதவராய் காட்சி தந்து வருகின்றனர்.
இப்பிரிவினரே சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சாரம் போன்றவற்றில் ஏற்றத்தாழ்வுகளோடு வாழ்ந்து வருகின்றனர். எனவே இவர்கள் அதிகாரம் பெற வேண்டுமானால் இன்றைய கால கட்ட சமூக அமைப்பிலிருந்து விடுபட்டு வெளியேறினாலே போதும் எனவும் கூறலாம்.

அதிகாரம் எப்படி :
இம்மக்களை அதிகாரப்படுத்த பல வழிமுறைகள் இன்று கையாளப்பட்டு வருகின்றன அவை.

பொருளாதார மேம்பாடு :
பாதிக்கப்பட்ட மக்கள் அதிகாரம் பெற்றவர்களாக மாற பொருளாதார மேம்பாடு அத்தியாவசியமான ஒன்றாகும். பொதுவாக பொருளாதார மேம்பாடு
அ) சேமிப்பு
ஆ) அரசு திட்டம் பெறுதல்
இ) தொழில் வாய்ப்பு உருவாக்குதல்
சேமிக்காத மனிதன் கூரை இல்லாத வீட்டிற்கு சமம் என்று கூறுவர். ஆம் இன்றைய சூழலில் மனிதனின் செலவினம் பல வழிகளில் விரயம் மற்றும் ஆடம்பரங்களால் உருவாக்கப்படுகிறது. இதனால் பணம் பல வழிகளில் வீணடிக்கப்படுகிறது. எனவே, இப்பணத்தை சேமிப்பதின் மூலம் பண வளம் உள்ளவனாக மாற முடியும். இதன் மூலம் அதிகாரம் உள்ளவர்களாக மாற முடியும்.
இச்சேமிப்பு தனி நபர் அளவில் என்பதைவிட குழு அளவிலான சேமிப்பாக இருந்தால் சிறப்பானதாக இருக்கும். அப்பொழுதுதான் அவர்களுக்குள் கொடுக்கல் வாங்கல் நடைபெற்று நாணய சங்கமாக செயல்பட முடியும். இச்செயல்பாட்டின் தேவைகளை ஒருவருக்கொருவர் அடைய முடியும். தேவையின் அடிப்படையிலான பணிகள் நடைபெறும் போது ஏழை எளிய மக்களும் அதிகாரம் படைத்தவர்களாக மாற முடியும்.
அரசு திட்டங்கள் கூட மனிதர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுக்கின்றது. அரசு திட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். இந்த விழிப்புணர்வு மூலம் அரசிடம் உள்ள நலத்திட்டங்கள் எதற்காக
எப்படி பயன்படுத்துவது என்று எண்ணத் தோன்றி அதன் மூலம் பொருளாதார முன்னேற்றம் அடையலாம். அரசிடம் இருந்து பெற வேண்டிய உரிமைகளாக அரசு திட்டங்கள் அடையாளம் காட்டப்படவேண்டும். அரசு திட்டங்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்நிலை உயர்த்தி வளர்ச்சிகளில் அவர்களை பங்காளியாக்கி பயன்பெறச் செய்து அதிகாரப்படுத்த இயலும்.
தொழில் வாய்ப்புகளை உருவாக்க வழிகாட்டுவதும் பொருளாதார மேம்பாட்டிற்கான அடித்தளமாகும். உள்ளூரில் உள்ள, தங்களது சுற்றுப்புறங்களில் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி தொழில் துவங்க மக்களுக்கு வழிகாட்டுதல் மிக முக்கியமானதாகும்.

சமூக மேம்பாடு :
சமூக மேம்பாடும் மக்களின் அதிகாரப்படுத்துவதற்கான ஆயுதமாக உள்ளது. இன்றைய சமூக நிலை ஏற்றத்தாழ்வு உள்ளதாக, சமத்துவம் அற்றதாக உள்ளது. ஆண், பெண் வேறுபாடு, இன வேறுபாடு, ஏழை ‡ பணக்கார வேறுபாடு, கல்வியின்மை, நீதியின்றி அவலமாக காட்சியளித்து கொண்டிருக்கிறது. இக்காட்சியின் கதாநாயகர்களாய் நமது மக்கள் நடித்துக்கொண்டிருக்கின்றனர். இச்சமூக அவல நிலையிலிருந்து மக்களை மீட்காமல் அவர்களை அதிகாரமுள்ளவர்களாக மாற்றுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.
பெண்களின் நிலை உயர்த்தப்பட்டு, சம கூலி, சம அந்தஸ்து, அதிகார பங்களிப்பு அளிக்கப்பட வேண்டும். சாதாரண சாமான்ய மக்களை மய்யப்படுத்துகின்ற சமூகமாக மாற்ற முயற்சி எடுத்தல் அவசிய தேவையாக உள்ளது. ஜாதிப் போர்வையிலான வேறுபாடுகள் களையப்பட வேண்டுமானால் தாழ்ந்தோர் அதிகாரப்படுத்தப்பட வேண்டும். உழைப்பு என்ற ஒன்று இல்லாவிட்டால் உற்பத்தி முழுமையடையாது என்ற உணர்வு மக்களிடம் ஊட்டப்பட வேண்டும். இவைகள் முழுமையாக நடைபெறும் காலமே அதிகாரம் கிடைத்ததற்கான காலமாக அமையும்.

மனிதவள மேம்பாடு

பொதுவாக மனிதர்களிடம் அச்ச உணர்வு பெரும்பான்மையாக உள்ளது. சமூகத்தை பார்க்கின்ற பார்வையிலும் வேறுபாடு உள்ளது. சமூக அறநெறிகளிலிருந்து மாறுபட்டு செல்கின்ற நோக்கும் தென்படுகிறது. இவைகள் மாறுபடுகின்றபோது அதிகாரப்படுத்துதல் பணி எளிதாக அமையும்.
இவைகளை நீக்க மனிதர்களுக்குள் இருக்கின்ற மனித வளங்கள் வீறு கொண்டு எழ வேண்டும். மனித வளங்களான ஆற்றல், அறிவு, திறன்கள் வெளிக்கொணரப்படவேண்டும். இவை மூன்றுமே எதனையும் சிந்திக்க தூண்டுவதாகும். நமது சமூகத்தில் ஒழுக்கம் மற்றும் பண்பாட்டு வீழ்ச்சியை வெளிச்சம் போட்டு காட்டும் கருவியாக உள்ளதுதான் மனித வளங்கள், பண்பாட்டு வீழ்ச்சியும், ஒழுக்க குறைவும் மக்கள் பெற வேண்டிய அதிகாரத்திற்கு தடைக்கல்லாக உள்ளது. அதிகாரமற்றவர்களாய் நாம் இருப்பதினால் இழந்தது என்ன என்பதை சிந்திக்க மனித வளம் முக்கிய பங்கு வகிக்கின்றது. எனவே மனித வள பயன்பாடு அதிகாரப்படுத்துதலில் முக்கிய பங்காற்றுகிறது.

வாழ்வாதார மேம்பாடு :
பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் இன்றைய கால கட்டத்தில் கவலை தரக்கூடியதாக உள்ளது. தன் சுத்தம், சுகாதார வாழ்வு போன்றவையும், நலவாழ்வு வாழ்வதற்கான சூழலும் இன்றைய தினம் மிக குறைவாகவே உள்ளது. பொதுவாக வாழ்வாதாரம் என்று கூறினாலே பணம் பொருள் என்பது மட்டுமே என்ற தவறான கருத்து உள்ளது. ஆனால் அவை உடல் நலம் மற்றும் சுகாதாரத்தையும் உள்ளடக்கியதுதான்.
மனிதனின் இன்றைய வாழ்வில் சத்துணவு உண்ண வழியில்லை. சுகாதார வாழ்வு கேள்விக் குறியாக உள்ளது. உயிர்வாழ முக்கிய தேவையான நீரைக்கூட சந்தேகமில்லாமல் அருந்த முடியவில்லை. நோயுற்றோர்க்கு சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள், சுதந்திரமடைந்து 60 ஆண்டுகள் கழிந்த பின்பும் கூட கிடைக்கவில்லை.
நாளொன்று அருந்த வேண்டிய, உண்ண வேண்டிய உணவு கிடைக்கவில்லையயன்றால் கூட பரவாயில்லை. தினமும் பட்டினியின்றி படுக்கைக்கு செல்ல முடியாத வெட்க கேடான சூழலே நிலவி வருகின்றது. அதிகாரம் இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்கிருந்து வரும் ? என்று இவை எல்லாம் கிடைக்கின்றதோ அன்றுதானே அதிகாரம் உள்ளவர்களாக மாற முடியும். ?

அரசியல் மேம்பாடு :
தீர்மானிக்கும் மற்றும் முடிவெடுக்கும் மக்களாக நாம் மாறிடும்போது உண்மையான அரசியல் மேம்பாடு அடைந்துவிட்டதாக பொருள் கொள்ள கூடும். கிராம அளவிலான அரசியலில் பெண்களும், தலீத் மக்களும் மற்றும் நமது இலக்கு மக்களும் பங்கு பெற முடிகின்றதா ?

மேலோட்டமாக உள்ளாட்சி அமைப்புகளில் பங்கு பெற்றாலும் அவர்களால் முடிவெடுக்கும் சூழலில் உள்ளனரா ? தீர்மானிக்கும் சக்தியாக மக்கள் மாறிவிட எண்ணியபோதும் முடியவில்லை. காரணம் அரசியல் என்பது இன்றும் கூட சிலரின் கரங்களில்தான் உள்ளது.
அரசியல் மேம்பாடே நமது மக்களின் அதிகாரத்திற்கு வித்திடும் என்பதில் என்றும் எள்ளளவு கூட சந்தேகம் நமக்கு எழக்கூடாது.
மேற்கூறிய எல்லாம் எப்போது நடைபெறும் என்ற சந்தேகம் நமக்குள் நெடுங்காலமாக எழுந்துள்ளது.
கார்ல்மார்க்ஸ் முன்பே நமது தெற்காசிய நாடுகளை பார்த்து கூறியுள்ளார். “குரங்குகளையும் மாடுகளையும் வணங்கும் மக்கள் இருக்கும் வரை சமூக, பொருளாதார, அரசியல் கலாச்சார அமைப்புகளிலிருந்து விடுபட முடியாது” இப்படித்தான் இன்று வரை உள்ளது கலாச்சார அமைப்பு.

மக்கள் அமைப்பு :
இவற்றிற்கு மாற்றாக மக்கள் அமைப்பு உருவாக வேண்டும். அப்படி உருவாகின்ற அமைப்பு மக்களால் ; மக்களுக்காக ; மக்களுடையதாக உருவாகின்ற அமைப்பாக இருக்க வேண்டும். அமைப்பின் மூலமாக மக்கள் சக்தி உருவாக்கப்பட்டு, பொருளாதார மேம்பாடு சமூக மேம்பாடு, வாழ்வாதார மேம்பாடு, மனித வள மேம்பாடு, அரசியல் மேம்பாடு, நிலைத் தன்மையுடையதாக மாற்றப்படும். பொது வாழ்வில் நமது செயல்பாடு தரம் குறைந்துள்ளது. இந்த அமைப்பின் மூலம் பொது வாழ்வின் தரத்தினை மீட்டெடுக்க முடியும்.
அதிகாரப்படுத்துதல் என்பது அரசால் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டாலும், தங்களின் வாழ்வின் இருப்பை தக்க வைத்துக் கொள்ள போராடி வரும் பெரும்பான்மை மக்களுக்கான சம வாய்ப்பு அளிப்பது குறித்து விவாதிக்காமல் மக்களை அதிகாரப்படுத்தவது கடினமாகும்.
விளைவு :
அதிகாரப்படுத்துதலினால் மக்கள் கீழ்கண்டவாறு உரிமைகள் பெறுவர்.

1. நிர்வாகத்தில் பிரதிநிதித்துவம்
2. அடிப்படை வழிமுறைகள் உருவாக்கப்படும்
3. ஜனநாயக வழிமுறைகள்
4. திட்டங்கள் கீழிலிருந்து துவக்கம்
5. சமூக பொருளாதார முன்னேற்றம்

எஸ்.அசோக்குமார்,
ஒருங்கிணைப்பாளர்,
ஜெயங்கொண்டம்.

இளைய சூரியனே….

உன் கண்ணீரைத் துடைப்பதற்கு
கரங்களை தேடாதே !
உன்னுள் கனலை மூட்டினால்
உனக்கு முளைத்திடும்

ஆயிரம் கரங்கள் !
உன் கவலைகளைச்
சிந்தனை நெருப்பினால் சுட்டெறி !

நீ வாழப் பிறந்தவன்
வீழ்வதற்கல்ல…

உன் சூரிய விழிகளை திற
இருட்டுக் கூட்டத்தினை
இடம் தெரியாமல் எரித்திடு !

நண்பா..
நினைவில் வை
இளைய சூரியனே நீதான்

கனவு என்பது
காலை வரை
ஆனால் உன் நினைவு
கல்லறை வரை

நினைக்க மறந்தாலும்
மறக்க நினைக்காதே !
காயம்பட்ட மனதை நேசி
நேசித்த மனதை காயப்படுத்தாதே

என் உயிர் தோழி !
பூவை விட்டு பிரியாத ஒளி போல
என் மனதை விட்டு பிரியாத

உன் நினைவு என்றுமே வேணும்.

ஜாக்குலின் மேரி

வாழ்வில் வசந்தம் காண…

1. மகிழ்ச்சி :
“அன்பு செய்ய ஓர் ஆளும்
செயல்பட ஒரு பணியும்
எதிர்பார்ப்புக்கொரு இலக்கும்
மகிழ்ச்சிக்கு இன்றியமையாதவைகளாம்.”   இமானுவேல் காண்ட்

மகிழ்ச்சி என்பது வாழ்வில் ஏற்படும் ஆனந்தம், இன்பம், நிறைவு என பல பொருளில் கூறலாம். மனிதவாழ்வில் ஒவ்வொரு ஜீவனும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகின்றன. மகிழ்ச்சியை தேடிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆகவே மகிழ்வைத் தேடும் படலத்தில் மனித குலம் வெற்றி பெற்றுள்ளதா ? என்கிறபோது சரியான பதிலை கூற முடியாமல் நின்று விடுகிறது.

ஒவ்வொருவரும் மகிழ்ச்சியை தேடுகிறோமே ; எங்கு கிடைக்கிறது ? என்ன விலை கொடுத்தாவது வாங்கி விடலாம். முடியுமா ? இது என்ன பொருளா ? விலை கொடுத்து வாங்குவதற்கு. அது ஓர் இனம்புரியாத உணர்வு. அதை வெளியே தேடிச்செல்ல முடியாது. ஒவ்வொரு மனிதனும் தன்னுள்ளே தேட வேண்டும். “மகிழ்ச்சி சூழ்நிலைகளால் வருவதில்லை, உள்ளத்தால் ஏற்படுவதுண்டு. நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் மகிழ்வடையச் செய்வதில்லை. உள்ளத்தில் இருந்து வெளி வருவது மகிழ்ச்சி அளிக்கும், நாம் எது எது வைத்திருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி ஏற்படாது, எப்படி அதனைப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது” என்கிறார் ய­ய்க் என்ற அறிஞர். ஆகவே மகிழ்ச்சியை நமது உள்ளத்தில்தான் தேட வேண்டும் என்பது புலனாகிறது.

தேர்வினில் வெற்றி பெற்று மாநில அளவில் முதல்வனாக வரும்பொழுது பெரிதும் மகிழ்கின்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றுவிட்டால் மகிழ்கின்றனர். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைத்துவிட்டால் மகிழ்கின்றனர். விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்து நல்ல விலைக்கு விற்றால் மகிழ்கின்றனர். இப்படியாக எல்லோரும் ஏதாவது ஒன்றில் மகிழ்கின்றனர். இது போதுமானதா ? இது நிறைவை தந்துவிடுமா ? இது நிரந்தரமானதா ? இல்லை. அப்படியயனில் நிரந்தர மகிழ்ச்சியை எப்படி உருவாக்க முடியும் ?. நிரந்தர மகிழ்ச்சி என்றால் துன்பமே இல்லை என்பதல்ல. இன்பமும், துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. ஆனால் துன்பத்தை களைந்து இன்பத்தில் எப்படி வாழ்வது என்பதில்தான் வாழ்வு அடங்கியிருக்கிறது. ஆகவே நிம்மதியை தருகின்ற நிறைவை தருகின்ற மகிழ்ச்சியை நாம் எப்படி உருவாக்க முடியும் என்பதில் கவனம் செலுத்துவோம்.

ஒரு புகழ் வாய்ந்த அரசன் வசதிகள் அனைத்தும் நிரம்ப பெற்றிருந்தான். ஆனால் மனதில் மகிழ்ச்சி இல்லை. அவையில் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்டான். சரியான விடை கிடைக்கவில்லை. ஆகவே ஒரு முனிவரிடம் கேட்டான். அதற்கு அம்முனிவர் ‘மகிழ்ச்சியாக வாழும் ஒருவரின் மேலாடையை ஒரு நாள் முழுவதும் நீ அணிந்திருக்க வேண்டும்’ என்றார். படை வீரர்களுக்கு மகிழ்ச்சியாக இருப்பவனை கண்டுபிடிக்க ஆணை பிறப்பித்தான். படை வீரர்கள் எத்திசையிலும் தேடியும் எவனும் கிடைக்காமல் வருத்தத்துடன் திரும்பி வந்துகொண்டிருந்தனர். வரும்பொழுது மகிழ்ச்சியாக சிரித்து கொண்டிருந்த பிச்சைக்காரனைக் கண்டனர். அவனிடம் விவரம் சொல்லி அவனது மேலாடையை கொண்டு வந்தனர். அந்த மேலாடையில் பல ஓட்டைகளும், தையல்களும் இருந்தன. பின் பக்கத்தில் பாதி துணியே இல்லை.

ஆம், மகிழ்ச்சியாக இருக்க பணம், பதவி, பட்டம், செல்வங்கள் இருக்க வேண்டும் என்பதல்ல. மாறாக உள்ளதை உள்ளவாறு ஏற்று நிறைவடையும் நல்ல மனம் மட்டும் தேவை என்பதை அப்பிச்சைக்காரன் உணர்த்தினான். மகிழ்ச்சி சிறிய சிறிய நற்செயல்களால் உருவாகும். அதாவது ஆதரவு வார்த்தைகளால், இறக்கம் கொண்ட செயல்களால், பிறரைப் புண்படுத்தாமல், பிறருக்காக சிறிது நேரம் ஒதுக்குவதால், பிறரின் துயரத்திற்கு செவிமடுப்பதால், நல்ல ஆலோசனை வழங்குவதால் ஆகிய இவைபோன்ற செயல்களால் மகிழ்ச்சி உருவாகும். இப்படிபட்ட பண்புகளை வாழ்வில் வளர்த்துக்கொள்வோம்.

ஒரு மனிதனின் முகம் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் கண்ணாடியாகும். எனவேதான் மகிழ்ச்சியாக இருக்கும்போது சிரிக்கின்றோம். துயரத்தில் இருக்கும் போது சோகமாக இருக்கின்றோம். கோபத்தில் இருக்கும்போது இறுக்கமாக இருக்கின்றோம். மகிழ்ச்சி வெளிப்படுத்தும் சிரிப்பை கடவுள் மனிதனுக்கு மட்டுமே கொடுத்திருக்கிறார். எனவேதான் பெரியவர்கள் “சிரிப்பு இல்லாத முகம் தெய்வம் இல்லாத கோயில்” என்பார்கள். ஏனெனில் சிரித்த முகம் தன்னம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தாங்கி நிற்கிறது. சிரிப்பு உடலுக்கு ஆரோக்கியமானது என்கின்றனர் மருத்துவர்கள். ஆகவே மகிழ்ச்சியை தமதாக்கிக் கொள்ள ஒவ்வொருவரும் முயல வேண்டும்.

“பகிர்ந்து வாழும் பொழுது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது” என்பார்கள். எனவே நமது மகிழ்ச்சி நிரந்தரமாக இருக்கவேண்டுமானால் நாம் பிறர் நல செயல்களில்
ஆர்வம் காட்டவேண்டும். பிறரது துயரத்தில் பங்கேற்கும்பொழுது, இருப்பதை பிறரோடு பகிரும்போது, திறந்த மனநிலையோடு பேசும்பொழுது, ஆதரவு
வார்த்தைகள் கூறும்பொழுது, பிறரை மகிழ்ச்சிப்படுத்துகிறோம். அம்மகிழ்வில் பங்கு பெறுகிறோம்.
இன்றைய எதார்த்த நிலை என்ன ? சோர்ந்து போன முகத்துடன் நடக்கின்றனர் பலர். நடை பிணங்களாக வாழ்கின்றனர் சிலர். விரக்தியின் விளிம்பிற்கே சென்று விட்டனர் இன்னும் சிலர். துயரத்தையே வாழ்வாக்கிக் கொண்டனர் பலர். ஏன் நிரந்தர நோயாளியாகவே மாறிவிட்டனர் பலர். காரணம் மகிழ்ச்சி இல்லை. இவர்களிடம் பதவி, பணம், பலம், அதிகாரம், அந்தஸ்து இருக்கின்றது. ஆனால் அன்பு செய்ய ஆள் இல்லை. எனவேதான் சூம்பிய வாழ்வை கொண்டுள்ளனர். எனவே அன்புக்கு அயலான் இருக்க வேண்டும். அவனோடு வாழ்வை பகிரவேண்டும். அப்போதுதான் மகிழ்வை நிரந்தரமாக்க முடியும்.

மெர்லின் மன்றோ ஒரு புகழ் பெற்ற சினிமா நடிகை அதிக பணம் சம்பாதித்ததால் மக்கள் அவளை புகழ்ந்தார்கள். திரை உலகம் அவளுக்கு பல புதிய வாய்ப்புகளை அளித்தது. அவளை கண்டு உலகம் மகிழ்ந்தது. ஆனால் அவளது உள்ளத்தில் மகிழ்ச்சி இல்லை. ஒரு நாள் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தன்னையே அழித்துக்கொண்டாள். உலகத்தில் எல்லாவற்றையும் அனுபவித்த நடிகை, மகிழ்ச்சியை மட்டும் அனுபவிக்க முடியவில்லை. காரணம் அவளை அன்பு செய்ய ஆள் இல்லை. பகிரும் மனம் அவளிடம் இல்லை. உள்ளத்து உணர்வுகளை பகிர ஆள் இல்லை. விளைவு மரணத்தை தழுவிக்கொண்டாள். பகிரும் பொழுது மனம் மகிழ்கிறது. இதைத்தான் இறைவனும் விரும்புகிறார்.

மேலும் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிக் கொள்ள, துன்பங்களை, துயரங்களை வேதனைகளை, வருத்தங்களை, விரக்திகளை களைந்து மகிழ்ச்சி கொள்ள சில வழிகள் :

* மனதை ஒழுங்குபடுத்த யோகா செய்யுங்கள்.
* இதமான இசையைக் கேளுங்கள்.
*      இயற்கையை ரசித்து பாருங்கள்
* குடும்பத்தினர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்
* பிள்ளைகளோடு விளையாடுங்கள்
* இலக்கை நிர்ணயித்து செயல்படுங்கள்.
இவை அனைத்தையும்விட
* அயலானோடு பகிர்ந்து அன்பு செய்யுங்கள்.
* பிறர் நல்ல செயல்களை பாராட்டுங்கள்.
* எதார்த்த நிலையை ஏற்றுக்கொள்ளுங்கள்.
* மனம் சற்று கனமாக இருந்தால் நீங்கள் நம்புகிற ஒருவரிடம் பகிர்ந்து தன்னம்பிக்கை பெறுங்கள்.
(வசந்தம் காண வழிகள் மேலும் தொடரும்…)

கிறிஸ்தும நற்செய்தி

தச்சனைக்கு பிள்ளையயன்றும் தாயயாருத்தி கன்னியயன்றும்
இச்சனங்கள் சொன்னாலும் இறைவனது திருக்குமாரா !
என்ற கண்ணதாசன் வைர வரிகள் இயேசுவின் இயல்பை எடுத்துக்காட்டுகின்றது. கடவுள் மனிதராக மனுவுரு எடுத்தார் என்ற உண்மைக்கு எடுக்கும் விழா கிறிஸ்து பிறப்பு விழா. கடவுளுக்கு மனிதனுக்கும் இடையே அமைந்த உறவு விழா, கடவுள் மனிதர் ஆனார், நமக்காக ஏழையானார். இது மனிதனுக்கு வாழ்வு வழங்கும் விழா.
இது குழந்தைக்குயயடுக்கும் விழா. “ஒவ்வொரு குழந்தை பிறப்பும் கடவுள் இவ்வுலகின்மீது நம்பிக்கை இழந்துவிடவில்லை என்பதன் அடையாளம்” – கவி இரவிந்தர்நாத் தாகூர். கடவுள் குழந்தையாக வருகிறார் என்பது இது நிறைவேறுகிறது. மண்ணுலகில் பிறக்கும் எல்லா குழந்தைகளும் நம்பிக்கை துளிகள்.
இது பகிர்வுக்கு எடுக்கும் விழா. கடவுள் மக்களின் விடுதலைக்காக மகனை கொடுத்தார். மகன் தனது மக்களுக்கு தன்னை கொடுத்தார்.
பணக்காரன் : சகோதரா நான் உன்னை நேசிக்கிறேன்.
ஏழை : நீயாவது என்னை நேசிப்பதாவது. நீ உண்டு குடித்து கும்மாளம் அடிக்கிறாய். நானே வேலைக்கு உணவுயின்றி தவிக்கிறேன். நீ அடுக்கு மாடிக்கு மேல் நிற்கிறாய். நானோ வீடுகூட இன்றி தவிக்கிறேன். நீயாவது என்னை நேசிப்பாதாவது.

பணக்காரன் : இல்லை என்னை நம்பு. நான் உன்னை உண்மையாகவே நேசிக்கிறேன். 
ஏழை : நீ நேசிப்பதாக இருந்தால் நீ கீழே என் நிலைக்குவா. அல்லது என்னை உன் நிலைமைக்கு உயர்த்து
பணக்காரன் : அது கஷ்டம். கொஞ்சம் பிச்சை போடுகிறேன்.
ஏழை : பிச்சையும் எனக்கு தேவையில்லை, நீ அன்பு செய்வதையும் நான் 
நம்பதயாராகயில்லை.
பணக்காரன் : ஏன் நம்ம மாட்டாய்.
ஏழை : அன்பு இருக்கும் இடத்தில் வெறும் பிச்சையில்லை, சகோதர பகிர்வு 
இருக்கும், சம மகத்துவம் இருக்கும், தோழமை இருக்கும், தன்னிழப்பு இருக்கும்.
இந்த கிறிஸ்துவ பிறப்பு விழா அர்த்தம் பெறவேண்டுமெனில் ஏழைகள் வாழ்வுபெற, அடிமைகள் விடுதலைப் பெற பகிர்வோம். மகிழ்வோம்.