Contact us
New Thrust Federation External Evaluation
எல்லோரும் ஓர் குலம்
முன்னுரை :
இந்திய நாடு பரந்து விரிந்த பெரியநாடு. இங்கே பல இனத்தவர், மதத்தவர் வாழ்கிறார்கள். இதற்கெல்லாம் மேலாக பல ஜாதிகள் நிறம்பித் தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஊறு செய்து கொண்டிருக்கின்றன. இந்த வேற்றுமைகள் மறைந்து மக்களினம் ஒன்றுதான் என்ற மனநிலை எப்போது இந்திய மக்களின் உள்ளத்தில் வேரூன்றுகிறதோ அப்போது தான் எல்லோரும் ஓர் குலம் என்று கூற முடியும்.
சமய வேறுபாடு :
இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர் என பல சமயத்தவர்கள் இந்தியாவின் பூர்வீகக் குடிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். என்றாலும் அவர்கள் மத்தியில் ஒற்றுமையில்லை. இந்து மக்கள் முஸ்லீம் மக்களையும், கிறிஸ்துவ மக்களையும் தாக்குகிறார்கள்.
எந்த மதத்தினர் எந்தக் கடவுளை வழிபட்டாலும் அது அவர்கள் உரிமை என்ற மனப்பான்மை ஏற்பட்டு, அவர்களும் மனிதர்கள் தான் என்ற மனிதநேயம் எப்போது மலர்கிறதோ அப்போது எல்லோரும் ஓர் குலம் என்ற சமன்பாடு நிலவும்.
ஜாதி வேற்றுமை :
மத வேறுபாட்டைவிடச் சாதி வேற்றுமை இன்று நாட்டில் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. இந்து மதம் என்ற ஒரு அமைப்பு அதற்குள் பல ஜாதி அமைப்பு போன்றவை இந்தியாவை வாட்டிக் கொண்டிருக்கிறது.
தீண்டத் தகாதவர்கள் என்ற ஒரு பிரிவினர் செய்யும் தொழில் அடிப்படையில் பிளவுப்பட்ட ஜாதி, ஜாதி சங்கம் என்ற பெயரில் மக்களை வேறுபடுத்தி கொண்டிருக்கிறது.
ஜாதி சங்கங்களையும் ஜாதி அடிப்படையில் நடந்து வரும் அரசியல் கட்சிகளையும் சட்டத்தால் தடை செய்ய வேண்டும். ஜாதி அடிப்படையில் வேலை வாய்ப்பு கொடுப்பதிலும் சில சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும். பொருளாதாரத்தில் சமநிலை ஏற்பட்டால் ஜாதிகள் தாமாகவே மறைந்து விடும்.
இன வேற்றுமை :
மாநிலங்கள் வாரியாக வாழும் மக்கள் இன வேற்றுமையிலும் கட்டுண்டு கிடக்கின்றனர். தமிழன் மலையாளியை மதிப்பதில்லை; மலையாளி மற்ற மாநிலத்துக்காரர்களை மதிப்பதில்லை; சில மாநிலங்கள் தனி நாடு போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆங்காங்கே தீவிரவாதம் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஒருமைப்பட்டு வளர, தேசிய ஒருமைப்பாடு ஏற்பட, இனவேற்றுமை களையப்பட வேண்டும். இன வேற்றுமை களைய மனிதநேயம் வளர்க்கப்பட வேண்டும் எல்லோரும் மனிதர்களே என்ற பக்குவம் ஏற்பட்டால் ஜாதி, இனம், மதம் அனைத்தும் மறந்து போகும்.
“இமயச் சாரலில் ஒருவன் இறுமினால்
குமரி வாழ்பவன் மருந்து கொண்டோடுவான்”
என்று பாரதிதாசன் கூறியது போல மனித நேயம் வளர வேண்டும். பாகிஸ்தான் குழந்தைக்கு இந்திய மருத்துவமனையில் சிகிச்சை பார்த்தனர் இதுதான் மனித நேயம். குஜராத் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களும் இப்போது சுனாமி அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உலக முழுவதும் இருந்து உதவிகள் வந்தது. இதுதான் மனிதநேயம். ஆனால் மத அமைப்புகளும், ஜாதி அமைப்புகளும் அதை தடை செய்கிறார்கள்.
முடிவுரை :
வருங்காலப் பாரதத்தைக் கட்டிக்காக்க வேண்டியவர்கள் இன்றைய மாணவர்களாகிய நாம் வருங்காலத்தில்
எல்லோரும் ஓர் குலம்; எல்லோரும் ஓர் இனம்; எல்லோரும் இந்திய மக்கள்.
என்ற பாரதியின் கருத்தை நிலைநாட்ட ஜாதி, மதங்களைக் களைந்து ஒருமைப்பாடு ஏற்படப் பாடுபடுவோமாக.
வேலையில்லா இளைஞன்
படித்தேன்
முடித்தேன்
வடித்தேன் – ஆம்
கண்ணீர் வடித்தேன் – என்றுவரும்
வேலை – அந்த
நாளை சொல்கின்றாயா!
சொல்.
– ஜெரிக் பெனடிக்ட், PLR 1039
சிறப்பு பொருளாதார மண்டலம் – ஆய்வுக் கண்ணோட்டம் – சார்பு நிலையா?
சிறப்பு பொருளாதார மண்டலம் இந்திய அளவில் 267 இடங்களில் அமைக்க அரசு திட்டமிட்டு அதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டுள்ளது. நமது தமிழகத்தில் கோவை, திருச்சி, சென்னை, நெல்லை, நெய்வேலி, பெரம்பலூர், ஜெயங்கொண்டம், ஈரோடு, ஓசூர், செய்யாறு, கன்னியாகுமரி நாங்குநேரி உள்ளிட்ட 47 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைய உள்ளது.
பாரம்பரியம் அமுப்பு :
ஏற்கனவே விவசாயம் பசுமைப் புரட்சியின் மூலம் அழிக்கப்பட்டு ஏகாதிபத்தியத்தின் நுழைவு மூலம் அழிக்கப்பட்டு விதைகள் அழிக்கப்பட்டு, செயற்கை உரங்கள் திணிக்கப்பட்டு, விளை நிலங்களை உவர் நிலங்களாக மாற்றி சீரழிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மீண்டும் ஒரு இடியாய் வந்துள்ளதுதான் சிறப்பு பொருளாதார மண்டலம் என்னும் இத்திட்டம். போதிய விலையின்மை இல்லாமையால், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளை மேலும் காணமல் போகச் செய்வதற்காக கொண்டு வரப்பட்டுள்ளதுதான் இச் சிறப்பு பொருளாதார மண்டலத் திட்டம்.
அப்படி! இச் சிறப்பு பொருளாதார மண்டலம் திட்டம் கூறுவது தான் என்ன? இதோ…
1. அந்நிய தொழிற் குழுமங்களுக்கு ஆயிரம் ஏக்கர் முதல் 45 ஆயிரம் ஏக்கர் வரை அடி மாட்டு விலைக்கு விற்பது. இதனையும் அரசே ஏற்பாடு செய்து தருவது.
2. 10 முதல் 15 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு சுங்க வரி கிடையாது.
3. இம்மண்டலத்திற்கு தேவையானவற்றை இறக்குமதி செய்ய அரசு அனுமதி தேவை இல்லை.
4. சிறுதொழில் உரிமம் ரத்து செய்யப்படுகிறது.
5. மண்டலத்திற்கு தேவையான அந்நிய மூலதனத்தை அரசின் அனுமதியின்றி பெற்றுக் கொள்ளலாம். மேலும், இங்கு உற்பத்தியாகும் பொருட்களுக்கான லாபத்தின் மீது வரி செலுத்த தேவையில்லை.
6. இச் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைய சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மின்சார வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி ஆகியனவற்றை இலவசமாக அமைத்து தர வேண்டும்.
7. இங்குள்ள தொழிற்சாலைகளுக்கு தொழிற் சங்க உரிமை, தொழிலாளர் நலச் சட்டங்கள், தொழில் தகராறு சட்டங்கள் செல்லுபடியாகாது.
8. ஏகாதிபத்தியங்களின் புதுக் காலனியாக்கத்தான் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், வாங்கப்படும் இடத்தில் 25 சதவீத இடத்தில் தொழிற்சாலையும், 75 சதவீத இடத்தில் கேளிக்கை விடுதி குடியிருப்புகள் கட்ட உரிமை செய்யவும் தாராள உரிமை உண்டு.
முந்தைய லட்சனம் – லாபதாரர்கள் யார்?
இத்திட்டத்தின் லாபதாரர்கள் யார் யார் தெரியுமா? ரிலையன்ஸ், டாடா, மகேந்திரா, இந்துஸ்தான் மற்றும் சகாரா போன்றோர்தான். தயவு செய்து எண்ணிப் பாருங்கள்… கலர் பனியன் உற்பத்தி என்று கூறி திருப்பூர் நகரம் நாசமானது போதாதா? தோல் பொருள் உற்பத்தி என்று கூறி வேலூர், திண்டுக்கல், திருச்சி ஆகிய நகரங்களின் நிலை தெரியாதா? இன்னும் ஏன் இறால் மீன் வளர்ப்பு என்று சொல்லி கடற்கரையோர நிலம் நாசமாக்கப்பட்டது போதாதா? இப்போது கோரப்பிடியில் நிற்கும் விவசாயிகள்… விவசாயத் தொழிலாளர்களை தாக்க இத் திட்டமா?
அரசு கூறுவது என்ன?
விளை நிலங்களை தவிர்த்து தரிசு நிலங்களை தந்து இத் திட்டத்தை கொண்டு வரலாம் என்ற கருத்து கூட தற்போது முன்வைக்கப்படுகிறது. ஆனால் இதுகூட மறைமுகமாக தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற மறுப்பதுதான். மேலும், நீர் ஆதாரங்களை தக்க வைத்திருப்பவை தரிசு நிலங்களே என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் இத்திட்டத்தால்தான் என்றும் கூறப்படுகிறது. ஆயிரமாயிரம் ஏக்கர் நிலங்களை பரித்து, விவசாயத் தொழிலாளர்களின் வேலை பரிக்கப்படுகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. சில பேருக்கு தான் இத்திட்டம் மூலம் வேலைவாய்ப்பு என்பதுதான் உண்மையிலும் உண்மை. எனவே ஆயிரமாயிரம் விவசாய கூலித் தொழிலாளர்களின் வேலை பறிக்கப்பட்டு சில ஆயிரம் பேருக்கு வேலை தருவதுதான் இத்திட்டம்.
இத்திட்டத்தின் மூலம் முதலாளித்துவத்தின் தரகு முதலாளி வளர்க்கப்பட்டு, உழைக்கும் மக்கள், நடுத்தர மக்கள், சிறு வணிகர்கள் பாதிக்கப்பட்டு நடுத்தெருவுக்கு அழைத்து செல்லப்படுவர். ஏனென்றால் அதி நவீன கருவிகள் பயன்படுத்தப்பட்டு, அவற்றோடு நமது சிறுதொழில் நிறுவனங்கள் போட்டி போட முடியாத சூழ்நிலை உருவாகும்.
இவ்வளவு பாதிப்புகள் உள்ளடக்கி கொண்டு வரப்படும் இத் திட்டம் நமக்குத் தேவையா? ‘உலகமயமாக்கல்’ என்ற போர்வையில் நாம் ஏகாதிபத்தியங்களை சார்ந்திருக்க வேண்டுமா? சிந்தியுங்கள்…
ஆர்ப்பரிப்போம்!
இவற்றிற்கு மாற்றாய் நாம் செய்ய வேண்டியது என்ன?
1.விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு அதனை வளர்க்கும் சேவை செய்யும் தொழில் துறை அமைக்க நமது அரசுகளை நாம் நிர்பந்திக்க வேண்டும்.
2.நமது மரபு சார்ந்த விவசாய முறைகளை கடைபிடித்து நாம் நிம்மதியாக வாழ அரசை எதிர்த்து ஆர்ப்பரிக்க வேண்டும்.
– ‘அம்மு’
ஆசிரியர் பேனா
மக்களை அதிகாரப்படுத்துதல் மிகவும் அவசியமானது. ஏனெனில் மக்கள் தங்கள் தேவைகளை தாங்களே உணர்ந்து பெற்று வாழ வேண்டும். மக்களை அதிகாரப்படுத்துதல் என்பது திட்டமிடுதல், முடிவெடுத்தல், செயல்படுதல் போன்ற அனைத்து மட்டங்களிலும் ஈடுபடசெய்வதேயாகும். இந்நிலையை உருவாக்க ஒவ்வொருவரும் முன்வரவேண்டும். குறிப்பாக பெண்கள் ஈடுபடவேண்டும்.
போலி மருந்துகள் விநியோகம் மலிந்துள்ள சூழலில் எச்சரிக்கையாக இருங்கள். எந்த மருந்துகளை வாங்கினாலும் கவனமுடன் ஆராய்ந்து வாங்குங்கள். இதைவிட எளிய வகையில், குறைந்த செலவில் மூலிகை மருத்துவம் பயன்படுத்தி நலம் பெற்று வாழுங்கள். விவசாயத்திற்கு இரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை உரங்களை பயன்படுத்தி பயனடையுங்கள்.
மாணவச் செல்வங்களே, புதிய கல்வியாண்டில் காலடி எடுத்து வைத்துள்ளீர்கள். கடின உழைப்பையும், விடாமுயற்சியையும் கொள்கையாக கொண்டு படியுங்கள். அதிக மதிப்பெண் பெறுவேன் என்று உறுதி கொண்டு உழையுங்கள். வெற்றி உங்களதே.
இந்நேரத்தில் நன்றி நிறைந்த நெஞ்சத்தோடு அருள்தந்தை A.மார்டின் தே போரஸ் அவர்களை நினைத்துப் பார்க்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக லுனிறீறீறீ நிறுவனத்தை புதிய யுக்திகளோடு வழிநடத்தி தற்பொழுது குடந்தை பேராலய பங்குத்தந்தையாக பொறுப்பேற்றுள்ளார்கள். நம் நிறுவனத்திற்கு ஆற்றிய தொண்டுகளுக்கு எங்களின் இதயத்திலிருந்து நன்றிகள். மேலும் இளமைத் துடிப்போடும், புதிய தெளிந்த சிந்தனைகளோடும் இணைச் செயலாளராக பணியாற்ற வந்துள்ள அருள்தந்தை. A.அருள்பிரகாசம் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம். வாழ்த்துக்கள்.- அருள்தந்தை அல்போன்ஸ்
மற்றும் ஆசிரியர் குழுமம்
மகளிர் தினச் செய்தி
செய்திடல் வேண்டுமம்மா”
மகளிர்தினம் பிறந்த கதை :-
1857 ஆம் ஆண்டு மார்ச்-8 ஆம் தேதி அமெரிக்கா ஆலைகளில் உழைக்கும் மகளிர் ஒன்று சேர்ந்து உழைப்புக்கேற்ற ஊதியம் தொழில் உரிமை, மனித உரிமை போன்றவற்றிற்காகப் போராடினர்.
1910 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக தொழிலாளர்கள் மாநாட்டில் ‘கிளாரா’ என்பவரின் கோரிக்கைக்கு இணங்க மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர்தினமாக அறிவிக்கப்பட்டு அதன்பின்னர் நடைமுறைக்கு வந்தது.
1975 ஆம் ஆண்டு முதல் 1985 ஆம் ஆண்டு வரையிலான பத்தாண்டு காலத்தை அகில உலக மகளிர்பத்தாண்டுகள் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்து உலகெங்கும் மகளிர் உரிமை எழுச்சிக்கு வித்திட்டது.
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினம் எல்லா நாடுகளிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மகளிர் பெருமை / உரிமைகள் இப்போது உலகறியச் செய்யப்பட்டு வருகின்றன.
மகளிர் தினத்தில் மனதில் எழுந்த சிந்தனைகள் :-
மார்ச் மாதம் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் உலகமெங்கும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு அங்கு எனாதபடி எங்கும் மகளிர்க்கு தனி மரியாதை தரப்படும் நேரம் நெருங்கிவிட்டது. உரிமைகள் ஒடுக்கப்பட்டு மனம் நொறுங்கி கிடந்த மகளிர்க்கு உலகளவில் அங்கீகாரம் கிடைப்பது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. எட்டாக்கனியாக இருந்த எத்தனையோ மகளிருக்கு இன்று சுலபமாகக் கைக்கூடும் காலம் கனிந்து விட்டது. துணிந்து பல துறைகளில் தங்கள் சாதனைகளைத் தொடர்ந்து செய்து வரத் தொடங்கிவிட்டார்கள். முடங்கி கிடந்த மகளிர் முழு மூச்சுடன் தங்கள் அறிவாற்றல்களை வெளி உலகிற்கு காட்டி அசத்த ஆரம்பித்துவிட்டார்கள். பெண்களை கிள்ளுக்கீரையாக எண்ணி நகையாடிய காலம் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது. பெண் சாதனையாளர்கள் உலகை பிரமிக்க வைத்து கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கு பெருமை தரக்கூடிய பிரகாசமான காலம் இது. நம்மால் எதுவும் முடியுமென நம்பிக்கைத் துளிர் விட துவங்கிவிட்டது. இந்த நம்பிக்கை பலப்பட வேண்டும். பரவலாக்கப்பட வேண்டும். இதனை நினைவுறுத்த, நிலை நாட்ட சர்வதேச மகளிர் தினம் நமக்குத்துணை நிற்குமென நாம் நம்பலாம். மகளிர் எழுச்சி இன்று மகத்தான ஒன்றாகும். பழமைவாதிகள் அதனை பகிரங்கமாக எதிர்ப்பு காட்ட துணிவில்லாத பலவீனப்பட்டுள்ளனர். இருந்தாலும் அங்கும் இங்கும் சந்து பொந்துகளிலும் ஒதுக்குப்புறமான இடங்களிலிருந்து பெண்களுக்கு எதிராக ஓலம் இடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். மகளிரின் ஒருமித்த குரலாலும், உரத்த செயல்பாடுகளாலும் மகளிர் உரிமைகளுக்கு பாதகம் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
பெண் சிசுக் கொலை, வரதட்சணைக் கொடுமை, திருமணமான பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்கள்/சிரமங்கள், பாலியல் கொடுமைகள், பல வழிகளில் மகளிருக்கு எதிரான எழும் கொடுமைகள் அடையாளம் கண்டறியப்பட்டு அதற்கான சீரிய செயல்திட்டங்களை உருவாக்கவும், தீட்டிய தீட்டங்கள் தெளிவான முறையில் நடைமுறைப்படுத்தவும், மகளிர் இயக்கங்கள் ஒருங்கிணைந்து ஓர் அணியில் நின்று திடமாக போராட வேண்டும்.
நமக்குத்தான் எல்லா உரிமைகளும் ஒவ்வொன்றாக வந்துவிட்டதே! வரப்போகிறதே! என்று வாளாதிருந்துவிட்டால் காலம் காலமாக போராடிப் பெற்ற உரிமைகள் காணாமல் போய்விடும் அபாயம் உள்ளது என்பதையும் நம் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அதேசமயம், முக்கியமான ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நம் போராட்டம் என்று ஆண்களுக்கு எதிரானது அல்ல. ஆணும், பெண்ணும் இணைந்து ஒற்றுமையாக உழைத்தால் சமூக பொருளாதார மறுமலர்ச்சி பூரணமாக நிறைவேறும்.
பெண்ணாக பிறக்க வேண்டுமென்ற சீரிய சிந்தனை இந்த சர்வதேச மகளிர் தினத்தில் உருவாக நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.
– G.சிவக்குமார், CO
மகளிர் திட்டம்
பணச் செலவில்லாத விவசாயம்…!
பஞ்சாயத்துராஜ் அமைப்பு
கடந்த அரை நூற்றாண்டுகளாக ஏற்பட்டுள்ள நவீன மயம், சமூக பொருளாதார மாற்றங்கள், வளர்ச்சி ஆகியவை வறுமையை போக்குவதற்கு பதில் வறுமையின் நிலையை அதிகரிக்கச் செய்துள்ளது. சர்வதேச நிதி நிறுவனங்களின் வழிகாட்டுதலால் கடைபிடிக்கப்படும் பொருளாதார கொள்கைகள் ஏழை உழைப்பாளர்களின் வாழ்வுரிமையை பறித்து வருகின்றது. சுற்றுச் சூழல், உயிர் சூழல் நிலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் பெரும்பாலான மக்களின் வாழ்வுரிமை பெரிதும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறது.
இந்த சமுதாய அமைப்பு இறுக்கமான, முரண்பாடுள்ள, ஏற்றத் தாழ்வுள்ளதாக உள்ளது. வாங்குபவன் கொடுப்பவன் உறவுமுறை உருவாக்கப்பட்டுள்ளது. ஓட்டு போடுவது, பெட்டிசன் (மனு) போடுவது, பயனாளியாக இருப்பது என்றுதான் மக்களை பழக்கி இருக்கின்றோம். குடிமக்களாக (விவரம் தெரிந்தவர்களாக) பழக்கவில்லை. சுதந்திரம் வாங்கியும் சுதந்திரமாக இருக்க முடியவில்லை. நிறைய பேருக்கு சினிமாவை பற்றி, கிரிக்கெட்டைப் பற்றி தெரிந்திருக்கின்ற அளவிற்கு அரசியல் சட்டம் பற்றி தெரியவில்லை. உலக அரங்கில் இந்தியா பொருளாதார கட்டமைப்பில் 8வது இடம், மனிதவள மேம்பாட்டில் 127 மிலி 137வது இடம். ஆனால் மனிதனை மனிதனாக வாழவைக்க வேண்டிய இடத்தில் இல்லை.
உள்ளாட்சி வரலாறு :-
இந்தியாவில் உள்ளாட்சி வரலாறு என்பது நூற்றாண்டுக்கு மேல் கொண்டது. தமிழ்நாட்டில் சோழர்கள் காலத்திலேயே உள்ளாட்சி அமைப்புகள் இருந்துள்ளன. 1871ல் உள்ளாட்சிகள் நிதி சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 1884ல் சென்னை உள்ளாட்சி மன்றங்கள் சட்டம் தமிழ்நாட்டில் உள்ளாட்சி சுய அரசாங்கம் சம்பந்தப்பட்ட சட்டமாக அமைந்தது. 1907ல் இந்திய அரசால் நியமிக்கப்பட்ட அதிகார பரவலாக்கத்திற்கான ராயல் ஆணையம் (யூலிதீழியி உலிதுதுஷ்விவிஷ்லிஐ க்ஷூலிr deஉeஐமிrழியிஷ்விழிமிஷ்லிஐ) உருவாக்கப்பட்டது. இதன் விளைவாக 1920ல் உள்ளூர் வாரியங்கள் சட்டம் சென்னை கிராம ஊராட்சிகள் சட்டம் கொண்டுவரப்பட்டது.
சுதந்திரத்திற்கு பிந்தைய கால கட்டங்களில் இந்திய அரசியல் சட்ட உருவாக்கத்தின் போது உள்ளாட்சிகள் குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது. அதாவது ஒரு சுதந்திர நாட்டின் அரசியல் கட்டமைப்பு கிராமத்தை ஆதாரமாகக் கொண்டு அமைந்தால்தான் அது வலுவான அஸ்திவாரமாக அமையும். அதாவது வலுவான கிராம பஞ்சாயத்துகளின் அதிகார பரவலாக்கல் என்பது கிராமத்திலிருந்துதான் ஆரம்பமாக வேண்டும். அதன் அடிப்படையில் 1948 நவம்பர் 22ல் அரசு நெறிமுறை கோட்பாடுகளின் கீழ் ஊராட்சிகளை அமைத்துருவாக்கல் (நுrஆழிஐஷ்விழிமிஷ்லிஐ லிக்ஷூ ஸஷ்யியிழிஆe ஸ்ரீழிஐஉஜுழிதீழிமிவி) அமைந்தது. பல்வேறு ஆய்வுகள், கோரிக்கைகளின் விளைவாக பண்டித நேரு அவர்கள் பிரதமராக இருந்த பொழுது 1958ல் மத்திய அரசால் பலவந்தமாய் மேத்தா தலைமையில் ஒரு ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு அதிகார பகிர்வு தேவை என்றும், சமுதாய வளர்ச்சிப் பணிகளிலும், தேசிய விரிவாக்கப் பணிகளிலும் பொதுமக்களுடைய பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டுமென்றும், இவற்றில் அவர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அந்தக் குழு கூறியது. இந்தப் பின்னனியில் தமிழ்நாடு பஞ்சாயத்துகள் கூட்டம் 1958ல் உருவாக்கப்பட்டன.
அதிகார பரவலாக்கம் :-
“சுதந்திரம் சமூகத்தின் அடித்தளத்திலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு கிராமமும் ஒரு குடியரசாக விளங்கிட வேண்டும். ஒவ்வொரு குடியரசும் சுயமாக தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையிலும் அகில உலகத்திற்கு எதிராக தன்னை காத்துக் கொள்ளும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேல்மட்ட அமைப்புகள் வழிகாட்ட வேண்டுமேயல்லாமல் ஆணையிடக் கூடாது. அதிகார பரவல் இருக்க வேண்டும்” என்றார் தேசபிதா அண்ணல் காந்தியடிகள். “வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடவும், செயல்படுத்துவமான பொறுப்பினை மக்களிடமே ஒப்படைத்துவிட வேண்டிய நேரம் வந்து விட்டது” என்றார் பண்டிதர் நேரு.
ராஜீவ் காந்தி கனவு :-
மக்களை மதித்தல், மக்களை நம்புதல், அவர்களை அதிகாரப்படுத்துதல், அவர்களின் தலைவிதியை அவர்களே நிர்ணயம் செய்தல்.
அதிகார பரவலாக்கலின் அடிப்படை :-
– மக்களின் சுய மரியாதையை பாதுகாத்தல்.
– அரசியலில் மக்களின் நெருக்கம் அதிகமாக இருக்க வேண்டும்.
– பயனாளி அல்ல குடிமகன் என்ற உணர்வு வரவேண்டும்.
– அரசிற்கும், மக்களுக்கும் உள்ள இடைவெளி குறைக்கப்பட வேண்டும்.
– மக்கள் பார்வையாளராக வைக்கப்பட்டிருக்கிறார்கள். பங்கேற்பாளர்களாக வைக்கப்பட வேண்டும்.
– முன்னேற்றத் திட்டத்தில் மக்கள் பங்கேற்பு உறுதிபடுத்தப்பட வேண்டும்.
– அடிப்படையில் ஜனநாயகம் கீழிருந்து வரவேண்டும்.
– மக்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும்.
– ஒளிவு மறைவற்ற நிர்வாகம் இருக்க வேண்டும்.
– தீர்மானிப்பதில் குடிமக்களுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும்.
– சமூக நீதி, இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும்.
– திட்டமிடல் கீழிருந்து வரவேண்டும்.
– மக்களின் திறன் வளர்க்கப்பட வேண்டும்.
1984ல் பாரதப் பிரதமராக இருந்து இந்திராகாந்தியின் மறைவிற்கு பிறகு பதவியேற்ற ராஜீவ் காந்தி மக்களை அதிகாரப் படுத்தல், பரவலாக்கல் போன்றவற்றில் கவனம் செலுத்தினார். அதன் அடிப்படையில் மாநில முதல்வர்கள், உள்ளாட்சி துறை அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட நீதிபதிகள் ஆகியோரிடம் விரிவாக விவாதம் நடத்தினார்.
விவாதங்களின் வழியாக கண்டுபிடிக்கப்பட்டவைகள் :- (Diagnosis)
– பொறுப்பான நிர்வாகம் இல்லை.
– மக்கள் விளிம்பில் (கடைக்கோடியில்) இருக்கிறார்கள்.
– அதிகார தரகர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள்.
– வலுவான மத்திய மாநில அரசுகள், ஆனால் பலவீனமான ஜனநாயகம்.
– தலித்துகள், மலைவாழ் மக்கள் புறக்கனிக்கப்பட்டுள்ளனர்.
– திறமையற்ற, கருணையற்ற, அனுபவமற்ற கொடூரமான நிர்வாகம்.
– மிகக் குறைந்த அளவில் சேவை.
– அதிகமான நிர்வாக செலவுகள்.
– அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை.
ஆலோசனை :-
– நிர்வாகத்தில் பிரதிநிதித்துவம் (Representative administration)
– பெண்கள் மற்றும் விளிம்பில் உள்ளவர்களை இணைத்தல் (Inclusion of women & marginal)
– அடிப்படையிலிருந்து வழிமுறை உருவாக்குதல் (Creation of system at the grass root)
– முன்னேற்ற கண்ணோட்டம்.
– ஜனநாயக வழிமுறைகள்.
– ஏழைகளுக்கான செயல்பாடு.
– கீழிலிருந்து திட்டமிடல்.
– சமூக பொருளாதார முன்னேற்றம்.
தீர்வு :-
புதிய பஞ்சாயத்துராஜ் திட்டம் :-
மாநிலப் பட்டியலில் இருந்து வந்த பஞ்சாயத்து அமைப்பு பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டு 64 வது சட்டம் திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்தச் சட்ட திருத்தம் போபர்ஸ் பீரங்கி ஊழல் பிரச்சனையை முன்வைத்து தோற்கடிக்கப்பட்டது. மீண்டும் நரசிம்மராவ் பிரதமரானவுடன் 1992ம் ஆண்டு 73வது சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.
இந்திய அரசியல் சட்டம் :
3 முக்கிய பிரிவுகள் :
1. சட்டத்துறை – சட்டமன்றங்கள், பாராளுமன்றம்.
2. நிர்வாகத்துறை
3. நீதித்துறை
சட்டமன்றங்கள் :-
மாநில சம்பந்தப்பட்ட சட்டங்கள் இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு.
மாநில பட்டியல் துறைகள் :-
(1) காவல்துறை (2) பொதுப்பணித்துறை (3) விவசாயம் (4) கூட்டுறவு (5) சாலை போக்குவரத்து (6) கள், சாராய வரிவிதிப்பு (7) விற்பனை வரி (8) சினிமா சம்பந்தப்பட்ட வரிகள்.
பாராளுமன்றம் :-
மத்திய பட்டியலில் உள்ள துறைகள் சம்பந்தப்பட்ட சட்டங்களை இயற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு.
மத்திய பட்டியல் :-
(1) ராணுவம் (2) ரயில்வே (3) சுரங்கம், (4) தபால் தந்தி, தொலைபேசி (5) வங்கி மற்றும் இன்சூரன்ஸ் (6) சுங்கவரி (7) வருமானவரி (8) கம்பெனி நிர்வாகம் (9) தேசிய நெடுஞ்சாலை (10) அணு ஆயுதம்.
பொதுப் பட்டியல் :-
(1) கல்வி (2) சில வரிகள் (3) வேலை வாய்ப்புத் திட்டங்கள்.
பொதுப் பட்டியலில் உள்ள சட்டங்களை பாராளுமன்றமும், சட்டமன்றமும் இயற்றலாம், பாராளுமன்றத்தின் அதிகாரம் சற்று அதிகம். சட்டமன்றங்கள் மத்திய அரசை மீறிய செயல்களில் ஈடுபட முடியாது. 1992ல் அரசியல் சாசன 73வது சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.
73வது சட்ட திருத்தம் – கிராமங்கள் சம்பந்தப்பட்டது.
74வது சட்ட திருத்தம் – நகரங்கள் சம்பந்தப்பட்டது.
இதன் அடிப்படையில்தான் தற்போதைய பஞ்சாயத்துராஜ் சம்பந்தப்பட்ட சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. 1993 ஏப்ரல் 20ல் மாநில பட்டியலில் இருந்து வந்த பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. 1958ம் ஆண்டு பஞ்சாயத்துராஜ் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டு தமிழ்நாடு பஞ்சாயத்துராஜ் சட்டம் 1994 ஆனது, 73வது சட்ட திருத்தத்தில் உள்ள அனைத்து விதிகளும் தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்திற்கு பொருந்தும்.
(தொடரும்…)
– A.சந்தியாகு, CCO